பிரதான செய்திகள்

பௌத்த பிக்குகளுடன் இணைந்தே அரசியல் செய்கின்றேன் கபீர் ஹாசிம்

தாம் தீவிரவாத தரப்புடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


துருக்கியில் இருந்து முதலீட்டார்கள் போன்று வந்த இருவருடன் முஜிபுர் ரஹ்மானுக்கும், கபீர் ஹாசிமுக்கும் தொடர்பிருந்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவினால் அண்மையில் சாட்சியம் வழங்கப்பட்டிருந்தது.


இந்த சாட்சியம் தொடர்பிலேயே இந்த இருவரும் தமது மறுப்பை வெளியிட்டுள்ளார்கள்.


தாம் எப்போதும் கேகாலையில் பௌத்த பிக்குகளுடன் இணைந்தே பணியாற்றியதாக கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் அரசியல்ரீதியாக தம்மை பழிவாங்கவே இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை விஜயதாச ராஜபக்சவை இந்த விடயத்தில் குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுவாமி நாராயணன் கோவிலில் ”சாதிக் கான்”

wpengine

மன்னார்,கரிசல் மையவாடி! 3 பேருக்கு விளக்கமறியல்

wpengine

அரச சம்பளத் தொகையில் அரைவாசி இராணுவத்திற்கே; பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

Editor