பௌத்தர்களுக்கு எதிராக சதித்திட்டங்கள் இல்லை- ஓமல்பே சோபித தேரர்

பௌத்த பிக்குகளுக்கோ, பௌத்தர்களுக்கோ எதிராக எவ்வித சதித்திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள பிக்குமாரை கைது செய்து விளக்கமறியலில் வைத்தமை சம்பந்தமாக சிலர் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பௌத்தர்கள் அல்லாத நபர்களின் ஊழல்,மோசடிகளை மூடிமறைக்க ஒரு சக்தி செயற்பட்டு வருகிறது என்றும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares