போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் 400 முறைப்பாடுகள் பதிவு

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை கணனி அவசர முறைப்பாட்டு நிலையத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இதில் அதிகமான முறைப்பாடுகள் பேஸ்புக் தொடர்பானவை என்று இலங்கை கணனி அவசர முறைப்பாட்டு நிலையத்தின் பாதுகாப்பு பொறியியலாளரான ரொஷான் சந்ரகுப்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நூறில் 80 வீதமானவை போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாகவும், அனுமதியின்றி சட்டவிரோதமாக மற்றவர்களின் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தல் உள்ளிட்ட முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் மின்னஞ்சல் மூலம் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெறுவது தொடரபிலும் கடந்த இரண்டு மாதத்திற்குள் நான்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் சந்ர குப்தா தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares