பிரதான செய்திகள்

போலி அனுமதிப்பத்திரம்! உதய கம்மன்பில கைது

பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று காலையே தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உதய கம்மன்பிலவிடம் விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்தக் குற்றச்சாட்டில் வைது செய்யப்பட்ட உதய கம்மன்பில இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

“யார் அமைச்சராவதென்பது எமது தீர்மானத்திலேயே உள்ளது” வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine

மியன்மார் முஸ்லிம்களுக்காக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! ஐ.நா.வில் மகஜர்

wpengine

சீன – ஆசிய எக்ஸ்போ கண்காட்சியில் தென்னாசியாவின் முதலாவது நாடாக இலங்கை பங்கேற்பு; முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் றிசாத் அழைப்பு.

wpengine