போராளிகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட மூத்த போராளி மன்சூர் அவர்களின் போராட்ட அனுபவ அறிவுரை

(மூத்த போராளி)

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மாநாடு பாலமுனையில் எதிர்வரும் 2016.03.19 ம் திகதி மிகவும் பிரமாண்டமான முறையில் எழுச்சிமிக்கதாக இடம் பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு தற்போது பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் தேசிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி அன்சில் தலைமையில் போராளிகளுக்கான அறிவுறுத்தல் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.10500494_1594538100832064_3508805605074330502_n

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட மூத்த போராளியும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் தற்போது இடம்பெறும் அறிவுறுத்தல் கலந்துரையாடலுக்கு சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் காலத்திற்கு காலம் கட்சி சந்தித்த இழப்புக்களையும், போராட்டங்களையும் போராளிகளுக்கு விளக்கிக் கூறியதோடு, சந்தித்த இன்னல்களை கட்சியும் தலைமைகளும் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றிகொண்டது என்பதை வரலாறுகளை ஆதாரமாகக் வைத்து மிகவும் எழுச்சிமிக்க உரையொன்றை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.944389_1594538047498736_7638821432673713362_n

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வேரோடு சாய்த்து விடவும், கருவறுக்கவும், அழித்துவிடவும் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களும், எதிரிகளும், மாற்றுக்கட்சியினரும் காலத்திற்கு காலம் சதித்திட்டங்களை தீட்டி பல வகைகளிலும் முயற்சி செய்த போது கட்சியைக் காப்பாற்ற பாடுபட்டவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமகால அரசியலில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எத்திவைப்பதும், கட்சிப்போராளிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும் என்ற தொனிப் பொருளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு இடம் பெறவுள்ளது.

இன்றைய அறிவுறுத்தல் கலந்துரையாடலில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் , ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள்என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares