போதைப்பொருள் கடத்தல்! உரியவர்களின் சொத்து முடக்கப்படும்.

போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் ஆகியற்றில் ஈடுப்படுபவர்கள் சட்டவிரோதமான முறையில் சேமித்துள்ள சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதானிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.


போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டிக் கொண்டுள்ள சொத்துக்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமாதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதானிகள் பிரதமருடன் நேற்று அலரி மாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.


இச்சந்திப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


சட்டவிரோதமாக சேமிக்கப்பட்டுள்ள பணம், வாகனம், காணி மற்றும் வீடு, கட்டிடங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களை கைது செய்து சிறை வைத்து அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும் வரையில் அச்சொத்துக்களை அவர்களே உரிமைக் கொள்கிறார்கள்.

இதனால் கிடைக்கப்பெறும் பணம் மீண்டும் சட்டவிரோத செயற்பாடுகளுக்காவே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதற்காக எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதே இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும்.


போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளில் கைது செய்யப்படும் நபரின் சொத்துக்களை ஆரம்பத்திலேயே அதாவது வழக்கு விசாரணை நடவடிக்கைகள் நிறைவு பெற முன்னர் அரசுடமையாக்குவது குறித்து ஆராயப்பட்டது.


கறுப்பு பணம் சுத்திகரிப்பு சட்டம் மற்றும் 2006. 06ம் இலக்க நிதி கொடுக்கல் வாங்கல் சட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள சட்டங்களை முறையாகவும், விரைவாகவும் செயற்படுத்துமாறு பிரதமர் அதிகாரிகளுக்க ஆலோசனை வழங்கினார்.


இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.ஜி.கே மாயாதுன்ன, பதில் பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரட்ன, சட்டமாதிபர் திணைக்கள உயரதிகாரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்கள்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares