பிரதான செய்திகள்

பொலிஸ் நிலையத்தை அடித்து நொறுக்கிவிடுவேன்! அம்பிட்டிய சுமனரதன தேரர் எச்சரிக்கை

நாட்டில் இனவாதப் பிரச்சினைகள் பாரிய அச்சுறுத்தல்களாக மாறிவிட ஞானசார தேரரை உடனடியாக கைது செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதேவேளை அண்மைக்காலத்தில் பாரிய இனவாத பரப்புரைகளில் ஈடுபட்டு வந்த மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரதன தேரர் குறித்து செய்திகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அம்பிட்டிய சுமனரதன தேரர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த தேரர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை தாக்குவதற்கும் முற்பட்டுள்ளாத கூறப்படுகின்றது.

மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பொலிஸ் நிலையத்தை அடித்து நொறுக்குவதாகவும் மிரட்டலை விடுத்துள்ளார்.

சுமனரதன தேரர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை காலமும் அமைதியாக இருந்த மட்டக்களப்பு தேரர், ஞானசார தேரருக்கு கைது ஆபத்து சூழ்ந்து விட்ட பின்னர் தனது ஆட்டத்தினை மீண்டும் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகின்றது.

Related posts

ஆப்பிரிக்கா பயங்கரவாத தாக்குதலில் 25க்கு மேற்பட்டோர் பலி!

Editor

துரித சதுரங்க போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றுக்கொடுத்த சிறுமி

wpengine

பரீட்சையில் மோசடியா? 24 மணி நேர சேவை

wpengine