பிரதான செய்திகள்

பொலிஸ் செய்திகளை வழங்க புதிய நடைமுறை- பொலிஸ்மா அதிபர்

பொலிஸ் செய்திகளை வழங்குவதற்கு புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகப் பணிப்பாளர் சபை ஒன்றின் ஊடாக பொலிஸ் செய்திகள் வழங்கப்படும் என அவர் கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன மற்றும் ருவான் குணசேகர ஆகியோர் கடமையாற்றவுள்ளனர்.

பொலிஸ் செய்திகளை கிரமமான முறையில் அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டதன் பின்னர் பணிப்பாளர்களிடம் எந்தவொரு நபரும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய ஊடகப் பணிப்பாளா சபை விரைவில் நிறுவப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு பகுதியில் முறுகல் நிலை! மக்கள் போராட்டம்

wpengine

5லச்சம் மெட்ரிக் தொன் இறக்குமதி! அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைப்பு அமைச்சர் றிஷாட்

wpengine

வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் சாதனை: 34 மாணவிகள் 9 A சித்தி..!

Maash