பிரதான செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் விண்ணப்பம் கோரல்

ஸ்ரீ லங்கா பொலிஸுக்கு, பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இவ்விண்ணப்பத்துக்கான திகதி, இன்றுடன் நிறைவடைந்துள்ள போதிலும், மே மாதம் 2ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பத்துக்கான முடிவுத்திகதியை நீடித்துள்ளதாக, ​பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சாரதிகள் ஆகியோருக்கான ​விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மொழி பேசத்தெரிந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளை, அதிகளவில் உள்வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன, மத, நிற பேதங்களுக்கு அப்பால்ப்பட்டதே வைத்திசாலைகளின் சேவையாகும் அச்சு இயந்திரம் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்

wpengine

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் அதிகரிப்பு!! இதற்கு எதிரான விழிப்புணர்வு திட்டம் இன்று முதல் !

Maash

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்!

Maash