பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடியின் ஆழம் மற்றும் அகலத்தை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை-அனுரகுமார

ஜனாதிபதியினால் கூட்டப்படும் சர்வகட்சி மாநாட்டில் ஜே.வி.பி பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக அல்ல, அரசாங்கத்திற்குள் உள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்காகவே கூட்டப்படுகிறது என்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு முக்கிய அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளை களைய ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் விளைவே சர்வக் கட்சி மாநாடு என்று அவர் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுநோய்களின் போது இதேபோன்ற சர்வக்கட்சி மாநாடு, ஜனாதிபதியால் கூட்டப்பட்டது.

 எனினும், அரசாங்கம் கட்சித் தலைவர்களின் முன்மொழிவுகளுக்கு செவிசாய்க்கவில்லை.

மாறாக அதன் சொந்த நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தது என்று அனுரகுமார குறிப்பிட்டார்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் பொருளாதார நெருக்கடியின் ஆழம் மற்றும் அகலத்தை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம், வெளியிட்டுள்ள அறிக்கையை அரசாங்கம் இன்னும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயங்களை கருத்திற் கொண்டு சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கணவனின் கொடுமை தற்கொலைக்கு பாய்ந்த மனைவி, மாமியார்

wpengine

மன்னாரில் மூன்று வீட்டினை தாக்கிய இடி,மின்னல்

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கிடம் கல்வியமைச்சர் உறுதி.

wpengine