பிரதான செய்திகள்

பொத்துவில் – ஹெட ஓயா நீர்த் திட்டத்தை நிறைவேற்றுவேன்-அமைச்சர் ஹக்கீம்

 (எம்.ஜ.முபாரக்)
பொத்துவில்லுக்கு நீரை வழங்கும் ஹெட ஓயா திட்டத்துக்கு எதிரான இனவாதப் பிரசாரத்தை முறியடித்து அத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவார் என்றும்  2017 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்துக்குள் அத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்த வேலைத் திட்டம் தொடர்பில் பிற்பகல் உல்லே ஜும்ஆ பள்ளிவாசலில் அமைச்சருக்கும் ஹெட ஓயா வேலைத்திட்ட அபிவிருத்திக் குழு,பொத்துவில் ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பொத்துவில் பிரதேசம் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதை நாம் அறிவோம்.அதை முடிந்தளவு தீர்த்து வைப்பதற்கு நான்  பலமுயற்சிகளை எடுத்து வருகிறேன்.இன்றும்கூட புதிதாக இரண்டு கிணறுகளைத் திறந்து வைத்துவிட்டுத்தான் நான் இங்கு வந்துள்ளேன்.

அவை முழுமையாகப் போதாது என்பதை நான் அறிவேன்.முடியுமானவரை மிக விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கே நான் முயற்சிக்கிறேன்.அந்த அடிப்படையில்தான் ஹெட ஓயா திட்டத்தைப் முடிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

இந்த விவகாரம் அமைச்சரவைக்குக்  கொண்டு செல்லப்பட்டு  இப்போது பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களைக் கையாளும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அந்தக்குழுவில் நானும் உறுப்பினராக இருக்கின்றேன்.மிக விரைவில் அந்தத் திட்டத்தைச் செய்து முடிப்பதற்கு அவசியமான அனைத்து வேலைகளையும்  செய்து வருகிறேன்.

இந்தத் திட்டத்தைத் தடுப்பதற்கான இனவாத முயற்சிகள் இடம்பெறுவதையும் நான் அறிவேன்.சூழலியல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இனவாதிகள் இதைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.இந்தத் திட்டம் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் பத்திரிகைகள் ஊடாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால்,இது ஒரு பெரிய விடயம் அல்ல.அந்தப்பிரசாரங்களை இந்த ஹெட ஓயாத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பேன்.இதை 2017 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்துக்குள் உள்ளடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.-என்கிறார்.

Related posts

எதிர்வரும் 15ம் திகதிக்குள் அனைத்து எரிபொருள் தாங்கிகளும் GPS மூலம் கண்காணிக்கப்படும்!-காஞ்சன விஜேசேகர-

Editor

எனது ஊகத்தை உறுதி செய்த முதலமைச்சர்

wpengine

மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் கிறிஸ்மஸ்

wpengine