பிரதான செய்திகள்

பொத்துவில் முஸ்லிம்களின் காணிகள் அபகரிப்பு! மக்கள் ஆர்ப்பாட்டம்

பொத்துவில் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 650ஏக்கர் காணி வன பரிபாலன இலாகாவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளன.

குறித்த ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நேற்று புலிபிடித்தசேனை கமக்காரர் அமைப்பின் ஏற்பாட்டில் மதுரம்வெளி, புலிபிடித்தசேனை பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில்,

வனபரிபாலன இலாகாவினர் எமது பகுதிக்கு வந்து பெர்மிட் காணிகளில் கட்டைபோட்டு ஆக்கிரமிக்கத் தலைப்பட்டனர்.

 

நாம் இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர், அம்பாறை மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலருக்கும் எழுத்து மூல முறைப்பாட்டினை அனுப்பியிருந்தோம்.

எனினும் இதுவரையில் யாரும் பதில் அனுப்பவுமில்லை, நடவடிக்கை எடுக்கவுமில்லை. அதனால் நாங்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம்; அநுர சேனநாயக்க கைதாவாரா?

wpengine

16 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு!

Editor

மன்னார் அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் வலய கல்வி பணிப்பாளருக்கான பிரியா

wpengine