பிரதான செய்திகள்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க பரிந்துரை!

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடிய போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக, பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்திருந்தார்.

அவர் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியராவார்.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக இதற்கு முன்னர் ஜனக்க ரத்நாயக்க செயற்பட்டிருந்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் வாழும் விசித்திரமான சமூகம்! புதுவகையான திருமணம்

wpengine

தியாகங்கள் மூலமே வெற்றிகள் கிட்டும்! அமைச்சர் றிசாத்

wpengine

பாப்பரசர் பிரான்சிஸ்க்கு கூட கொரோனா வைரஸ் சோதனை

wpengine