பிரதான செய்திகள்

பொது தேர்தல் பற்றி றிஷாட் மற்றும் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் பலத்தை ஒன்றாக இணைக்கும் நோக்கில் றிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.


இது சம்பந்தமாக இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகித்த றிசாட் பதியூதீன் பின் அதில் இருந்து விலகி தனியான அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அத்துடன் கடந்த தேர்தல்களில் அவரது கட்சி தனித்து போட்டியிட்டது.

எவ்வாறாயினும் கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அடுத்து முஸ்லிம் வாக்காளர்களை மீண்டும் ஒரு அணிக்குள் சேர்க்கும் முக்கியத்துவம் குறித்து இரண்டு கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளன.

இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதும் இரண்டு முஸ்லிம் கட்சிகளும், ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலகி தனியான முஸ்லிம் கூட்டணியில் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டாலும் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைவது எனவும் அந்த கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

Related posts

பூதத்தைப் போன்று மஹிந்த வாங்கிய கடன்கள் வெளிவருகின்றன – அமைச்சர் கபீர் ஹாசிம்

wpengine

பாபர் மசூதியின் 25ஆண்டு நினைவு இன்று! இந்தியாவின் கறுப்பு நாள்

wpengine

நாமல், யோசித்த சிறை மஹிந்தவின் இளைய மகன் காதல் பாடலில் (விடியோ)

wpengine