பிரதான செய்திகள்

பொது தேர்தலில் அன்னம் சின்னத்தில் ரணில்,சஜித் அணி இறுதி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் வீட்டில் நேற்றிரவு இந்த விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்ததையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, முன்னாள் ராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன, புதிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் ஷர்மிளா பெரேரா உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.


ஐக்கிய மக்கள் சக்திக்கு அன்னப்பறவை சின்னத்தை வழங்க புதிய ஜனநாயக முன்னணியின் பிரதிநிதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.


இதனடிப்படையில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தேர்தல் சின்னமாக அன்னப் பறவை சின்னத்தை பயன்படுத்த இரு தரப்பும் இணங்கியுள்ளது.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் தனித்து போட்டியிடும் என தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் இப்படியான இணக்கத்திற்கு வந்துள்ளனர்.


கரு ஜயசூரியவின் வீட்டில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இந்த இளைஞனின் நிலைகண்டு உதவி கரம் நீட்டுவோம்!

wpengine

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தபோக்கு மக்கள் விசனம்

wpengine

விவசாய நவீனமயப்படுத்தலுக்காக புதிய செயலணி!

Editor