பிரதான செய்திகள்

பொதுபல சேனாவின் நடவடிக்கை பற்றி ஜனாதிபதி,பிரதமருடன் எப்படி நடப்பது பற்றி பேசிக்கொண்டோம் அமீர் அலி

(அனா)

பொது பலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லை என என்னால் காண முடிகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தாரும் இராப்போசன விருந்துபசாரமும் அதன் தலைவர் வை.கே.றஹ்மான் தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்நாட்டின் அரசியலுக்குள் ஒரு மதத்தின் கொள்கையாக காண்பிக்கின்ற திட்டத்திலே தான் நாங்கள் இந்த அரசியலை பேசிக் கொண்டிருக்கின்ற சமாந்தரமாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

நாட்டில் இனிவரும் கால கட்டங்களில் இவற்றுக்கு எல்லோரும் இயல்பாக நடந்து கொள்ள முடியும் என்கின்ற பார்வையிலே அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும் இன்முகத்துடன் செயற்படுதில் தான் எங்களது செயற்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற பார்வை எம்மிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது.

கடந்த காலங்களிலே நாங்கள் இஸ்லாம் பரவிய, அவசரமாக பரவிப் போன நாடுகளை வைத்து தங்களுடைய நாடுகளையும் பறிகொடுத்து விடுவோமோ என்ற அச்சமும் அவர்களிடத்தில் உள்ளது.

எதிர்வரும் காலங்களில் எங்களிடத்திலே மாற்றுக் கருத்துக்கள் மூலம் விட்டுக் கொடுப்பதன் மூலம் அவர்களுடன் நெருங்கிப் பழகுகின்ற விடயம் அவசரமாக செய்யப்பட வேண்டும்.

அண்மையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை அல்லது அமைச்சரவையை பகிஸ்கரித்துக் கொள்வதாக அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இறுதியாக எப்படி நடந்து கொள்வது பற்றி கூறுவதாக என கட்சி பேதமன்றி பேசிக் கொண்டோம்.

மக்களுடைய வழிகாட்டலில் நல்ல அரசியலாக, ஆன்மீகமாக, கல்வியாக, கலை கலசாரம் கொண்டதாக இருக்க வேண்டும் என வழிகாட்டுகின்ற ஒவ்வொரு நிறுவனமும் சமூகத்தில் இருந்து தோல்வியடைய முடியாது என்றும் தெரிவித்தார்.

Related posts

16ஏக்கர் காணி மன்னார் அரசாங்க அதிபர் வசம்! இன்று விடுவிப்பு

wpengine

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு பழைய விலையில்

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனை விமர்சிப்பதற்காவே மேடை தேடும் ஹக்கீம்!

wpengine