பொதுத் தேர்தல் நடத்தப்படுவது மேலும் கால தாமதமாகும்

பொதுத் தேர்தல் நடத்தப்படுவது மேலும் கால தாமதமாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சுகாதார அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்போது தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை என பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


எவ்வாறாயினும் பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கடந்த 15 ஆம் திகதிக்கு முன்னர் விருப்பு வாக்கு இலக்கங்களை வழங்கியிருக்க வேண்டும்.


வேட்பாளர்களுக்காக விருப்பு வாக்கு இலக்கங்களை வழங்கியது தொடர்பில் வெளியிட வேண்டிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாத காரணத்தினால், எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

 246 total views,  3 views today

Comments

comments

Shares