பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர்கள் சிலர் அதிருப்தி

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர்கள் சிலர் அதிருப்தி கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெரமுனவை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்கும், 2015 ஆம் ஆண்டு தோல்விக்குப் பின்னர் மற்றும் இவ்வருடம் ஏற்பட்ட சம்பவங்கள் ​தொடர்பில் பாடங்களைக் கற்றுக்கொண்டு, அதனடிப்படையில் செயற்பாடாமை காரணமாக இந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது. 

இதனால்,​ பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் குழுக்களாக பிரிந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருகின்றனர் என்றும் அதன்போதே, மேற்கண்ட விடங்கள் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் ளஎன்றும் அறியமுடிகின்றது. 
இவ்வாறான சந்திப்புகளின் போது, கட்சியின் இளம் உறுப்பினர்களின் பங்குப்பற்றல் மிகவும் குறைவாக இருந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares