உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பேஸ்புக் பாலியல் மிரட்டல்! வழக்கு பதிவு

இந்தியாவில் கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகம் இல்லாத இளம்பெண்ணுக்கு முகபுத்தகத்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண் தமது 14 வயதான சகோதரை சுட்டிக்காட்டி (Tag) ஒரு புகைப்படத்தை முகபுத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு அக்னிஷ்வர் சக்ரவர்த்தி என்ற இளைஞர், புன்னகையுடன் இடுகையினை (comment) பதிவேற்றியுள்ளார்.

தன்னுடைய முகபுத்தகத்தில் அறிமுகம் இல்லாத ஒருவர் இடுககையினை பதிவேற்றியுள்ளதால் அதனை அந்த இளம்பெண் நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் தனது இடுகையினை நீக்கியதால் ஆத்திரமடைந்த அக்னிஷ்வர் அந்த இளம்பெண்ணையும் அவரது 14 வயது சகோதரரையும் தனது நண்பர்களை வைத்து பாலியல் வன்புணர்வு செய்துவிடுதாக மிரட்டியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் ஒருவர்,
பாலியல் வன்புணர்வு செய்துவிடுவதாக மிரட்டுவதை பெண்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்படி யாராவது மிரட்டினால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அக்னிஷ்வர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கின் கீழ் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், மேலும் 14 வயது சிறுவனையும் பாலியல் வன்புணர் செய்துவிடுவதாக மிரட்டியதால் சிறுவர் பாதுகாப்பு வழக்கின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அக்னிஷ்வர் சக்ரவர்த்தி குறித்து அவனுடைய நண்பர்கள் தெரிவிக்கையில், அவன் எப்பொழுதுமே இப்படிதான் என்றும், எல்லா பெண்களிடமும் இது போல தான் பேசுவான் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அக்னிஷ்வர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார், அவரை கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

Related posts

அத்தியவசிய பொருட்களை மானிய விலைகளில் வழங்குவதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை-எஸ்.பி.திஸாநாயக்க

wpengine

ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வு

wpengine

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை 10ம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை!

Editor