பிரதான செய்திகள்

பேஸ்புக் பதிவு மூலம் நாட்டு மக்களுக்கு சஜித் அறிவித்தல்

நாட்டில் காணப்படும் ஆபத்தான நிலைமை காரணமாக மீண்டும் அறிவிக்கப்படும் வரை அனைத்து பொதுக் கூட்டங்களையும் இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.


ஐந்து வாரங்களுக்கு முன்னர் சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் பரவிய சந்தர்ப்பத்தில், அதன் ஆபத்து தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சுட்டிக்காட்டி வந்தார். எவ்வாறாயினும் இலங்கையிலும் அந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது.


அந்த சந்தர்ப்பத்தில் அனைத்தையும் விட மக்களின் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஆரோக்கியமான இலங்கைக்காக அனைவரும் கட்சி பேதமின்றி இணைய வேண்டியது அத்தியவசியம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளதுடன்

wpengine

Editor

தெமட்டகொட சமிந்த மீது அதிக கரிசனை காட்டும் ஞானசார தேரர்

wpengine