பிரதான செய்திகள்

பேஸ்புக் பதிவில் கஞ்சா சேனை படம்

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவில் வீரசேகரகம பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா சேனையை பொலிஸார் அழித்துள்ளனர்.
பேஷ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட செல்ஃபி புகைப்படத்தை ஆதரமாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கஞ்சா சேனை பற்றி தகவல் கிடைத்துள்ளது.

கால் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 அடி உயரம் கொண்ட 115 கஞ்சா செடிகள் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சாவை பயிரிட்டிருந்த சந்தேகநபரையும் பொலிஸார் இதன்போது கைது செய்துள்ளனர்.

வெல்லவாய – வீரசேகரகம, மாலேவனயாய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

இந்த நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வவுனியா புகையிரத்துடன் மோதி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

wpengine

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் புதிய தீர்மானம்

wpengine

மன்னாரில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கஞ்சா பொதியுடன் கைது

wpengine