பேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் என்ன தெரியுமா?

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டிற்கான நிகர இலாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர லாபம் 1.5 பில்லியன் டொலரை ‌தொட்டுள்ளது.

இந்த தொகையானது கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட 512 மில்லியன் டொலர்கள் அதிகமானதாகும்

பேஸ்புக் நிறுவனம் மும்ம‌டங்கு லாபம் பெற்றதன் மூலம் நடப்பாண்டில் மிகச்சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளதாக அதன் நிறுவுனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேலும், பேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்து 165 கோடியை எட்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares