பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை பொருள் விற்பனை தொடர்பாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மறுத்த குற்றசாட்டிலேயே இவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவல்களை வழங்க முடியாது என டியாகோ சோடன் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இக்கைது தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares