பேஸ்புக் எனது உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வது போல உணர்ந்தேன்-விஜய் சேதுபதி

சில வாரங்களுக்கு முன்புவரை பேஸ்புக்கில் பரபரப்பாக இருந்த விஜய் சேதுபதி, அண்மையில் அதிலிருந்து வெளியேறிவிட்டார். சமூகவலைத்தளங்களில் பேஸ்புக் முதலிடத்தில் இருந்தாலும் நட்சத்திரங்கள் மத்தியில் டுவிட்டர்தான் பிரபலமாக இருக்கின்றது.

திரையுலகைச் சேர்ந்த பலர் இன்னமும் கூட பேஸ்புக்கில் உலா வருகின்றனர். அவர்களில் ஒருவராக இருந்த விஜய் சேதுபதி இப்போது இல்லை என்று ஆகிவிட்டார். பேஸ்புக்கிலிருந்து வெளியேறியது ஏன் என்ற கேள்விக்கு விஜய்சேதுபதி விளக்கமளிக்கையில், ‘கடந்த சில வருடங்களாக நான் பேஸ்புக்கில் இருந்தேன். கருத்துக்கு பதில் சொல்வேன், இரசிகர்களின் பாராட்டுக்கு நன்றி சொல்வேன்.

ஆனால், பேஸ்புக் எனது உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வது போல உணர்ந்தேன்.  ஒருவர் சோகமான செய்தியை பகிர்ந்ததை காண நேரிட்டது. ஆனால், அது குறித்து நான் யோசிக்கும் முன்னரே வேறொருவர் நகைச்சுவையான பதிவு ஒன்றை அவர் கணக்கில் பகிர்ந்திருந்தார்.

இது என்னை குழப்பமடையச் செய்தது. அந்தச் செய்திக்காக அழுவதா, இல்லை இந்த பதிவுக்காக சிரிப்பதா என்றே தெரியவில்லை. இந்த முரண்பாடு என்னை பாதித்தது, குழப்பியது. அதனால்தான் பேஸ்புக்கில் என் கணக்கை அழித்து விட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி. பேஸ்புக்கிலிருந்து வெளியேறிய விஜய்சேதுபதி டுவிட்டரிலும் அதிகாரபூர்வமாக இல்லை. அதனால் அவரது பெயரில் பல போலி கணக்குகள் டுவிட்டரில் உலா வருகின்றன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares