தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் சிவப்பு எச்சரிக்கை இல்லை

எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பலன் தராததால் போலிச் செய்திகளைக் காட்டும் சிவப்பு நிற எச்சரிக்கை சின்னத்தை இனி அந்தப் பதிவுகளின் அருகே காண்பிக்கப் போவதில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

போலிச் செய்திகளை பரிசோதனை செய்யும் வலைத் தளங்களால் பொய் என்று உறுதிசெய்யப்பட்ட செய்திகளின் அருகே கடந்த டிசம்பர் 2016 முதல் அந்த சர்ச்சைக்குரிய சின்னத்தை ஃபேஸ்புக் நிறுவனம் காட்டத் தொடங்கியது.

சிகப்பு நிற எச்சரிக்கை சின்னத்துக்குப் பதிலாக இனி தொடர்புடைய செய்திகளை அந்தப் போலிச் செய்திகளின் அருகில் காண்பிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

“சிகப்பு நிறக் குறியீட்டைப் போன்ற வலிய சின்னங்களை அந்தப் போலிச் செய்திகளுக்கு அருகில் வைப்பதால் அது அச்செய்தி மீது ஆழமான நம்பிக்கையை உருவாக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது எங்கள் நோக்கத்திற்கு நேர் எதிரானது,” என்று அந்நிறுவனத்தின் டெஸ்ஸா லயான்ஸ் கூறியுள்ளார்.

அந்த எச்சரிக்கை சின்னம் காண்பிக்கப்படுவதால் போலிச் செய்திகள் படிக்கப்படுவது குறையாவிட்டாலும், அவை பகிரப்படுவது குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனிமேல் எச்சரிக்கை சின்னம் காண்பிக்கப்படுவதற்கு பதிலாக உண்மைத் தன்மை உறுதிசெய்யப்பட்ட செய்திகள் அந்தப் பதிவுகளின் அருகில் காண்பிக்கப்படும்.

Related posts

முஸ்லிம்களை எவரும் கேவலப்படுத்தாத வகையில் கேவலப்படுத்திய விக்னேஸ்வரன் -அன்வர் கண்டனம்

wpengine

இணையத்தளங்கள், சமூக வலைத்தள போலிச் செய்தி! அலி சப்ரி நடவடிக்கை

wpengine

Mahargama Cancer Hospital urgent need a Pet-Ct-Scanner Machine -needed Rs. 200 million -please help

wpengine