உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் ஆள் பிடித்த புர்கான்! ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட

ஹிஸ்புல் முஜாகிதீன்  இயக்கத்தின் தலைமை கமாண்டராக கருதப்பட்ட புர்கான் வானியை இந்திய ராணுவத்தினர் கடந்த வெள்ளி சுட்டுக் கொன்றனர். இது இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும்.

பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். ஒருகட்டத்தில்  படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனார். பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அப்போது அவருக்கு வயது 15 தான்.
இணையதளங்கள், சமூக வலைத் தளங்களை கையாள்வதில் புர்கான் கெட்டிக்காரராக இருந்ததால், இதன் வாயிலாக தீவிரவாத இயக்கத்துக்கு வேண்டிய நபர்களை தேர்ந்தெடுப்பதில் திறமையாக செயல்பட்டார். 

தீவிரவாதச் செயல்களை வீடியோவாக பதிவு செய்து அதனை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவார். அதற்கு லைக் போடுபவர்கள்,காமாண்ட் போடுபவர்களை குறி வைத்து நட்பாக்கிக் கொள்வார்.பின்னர் அந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கும் வேலையில் ஈடுபடுவார். அப்படி 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை அந்த இயக்கத்தில் புர்கான் சேர்த்துள்ளார். தான் சேர்த்து விட்டவர்கள் ‘ஆக்டிவாக’ இருக்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமியக் கொடி பறக்கவிட வேண்டுமென்பதுதான் புர்கானின் கோஷமாக இருந்தது. ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருந்த இவரது தலைக்கு  இந்திய அரசு 10 லட்சம் அறிவித்திருந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட.  கடந்த 2015ம் ஆண்டு புர்கானின் சகோதரரர் காலீத்தையும் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.  காலீத், புர்கானை சந்திக்க சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

புர்கான் கொல்லப்பட்டது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி  என ஆனந்தாக் மண்டல ஐ.ஜி ஜாவேத் கிலானி தெரிவித்துள்ளார். புர்கான் கொல்லப்பட்டதையடுத்து தெற்கு காஷ்மீரில் குல்காம் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில்  2 பேர் பலியாகினர். 3 போலீசார் உள்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புர்கானின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர்   திரண்டதால்,  காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.

Related posts

இன,மத பேதமின்றிப் பணியாற்றுகின்றேன்! சிலர் என்னை ஊடகத்தில் போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

ஜனாதிபதியின் கரங்களிலிருந்து விருதினை பெற்றுக்கொள்ள முடியாது

wpengine

தொழிற்சங்கங்கள் அரசியலுடன் இணையாமல் சுதந்திரமாக செயற்பட வேண்டும்.

wpengine