தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கின் ஊடாக 500 லச்சம் ரூபா நிதி மோசடி!

பேஸ்புக் ஊடாக நபர்களிடம் நிதி மோசடி செய்த 25 இற்கும் அதிகமான வெளிநாட்டவர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நைஜீரியா மற்றும் உகண்டா நாடுகளைச் சேர்ந்தவர்ளே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நீர்கொழும்பு கல்கிஸ்ஸ தெகிவளை, காலி மற்றும் மாலம்பே ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருந்து மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஊடாக நண்பர்களை இணைத்துக்கொண்டு அவர்கள் மூலம் சுமார் 500 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

மோசடி குறித்து இதுவரை 15 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கருணா,பிள்ளையான் ஒட்டுக் குழுக்களால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தாய் தகப்பனன் இல்லாமல்

wpengine

மட்டக்களப்பு மக்கள் சந்திப்புக்களிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டுக்கு பெரு வரவேற்பு!

wpengine

முஸ்லிம்கள் மீது பலி சுமத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine