பிரதான செய்திகள்

பேரினவாத ஒடுக்கு முறைகளுமே நமது நாட்டை நிம்மதி இழக்கச் செய்கின்றது

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும், மதங்களுக்கிடையிலான பிரிவினைகளும், பேரினவாத ஒடுக்கு முறைகளுமே நமது நாட்டை நிம்மதி இழக்கச் செய்கின்றது என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


மன்னார் – முருங்கனில் வாண்மை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும், மத முரண்பாடுகளையும் சீர் செய்து அதனை முடிவுக்கு கொண்டுவருவது ஆசிரியத் தொழில் ஆகும்.

தென் கிழக்கு ஆசியாவில் கல்வியில் உச்ச நிலையில் இருக்கும் பெருமை பெற்றுள்ள எமது நாடடில், தற்போதைய பிரிவினைகளால் பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.

ஐக்கியத்தையும், சகோதரத்துவத்தையும், இன செளஜன்யத்தையும் மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பும் கடமையும் புனிதமான ஆசிரியப் பணிக்கு நிறையவே இருக்கின்றது.

அதிபர்கள் ஆசியர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளடங்கிய இந்த துறையானது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பேரதிஷ்டம் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடிகானினை சரியான முறையில் அமைப்பதற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆலோசனை

wpengine

Duties and functions of new Ministers gazetted

wpengine

சுத்தமான குழாய் நீரை வழங்குவதில் காலதாமதம்

wpengine