பிரதான செய்திகள்

பெரும்பான்மையினை இழந்த வடமாகாண சபை

வடமாகாணசபையில் ஆட்சியமைக்கப்பட்டு 3 வருடங்கள் 10 மாதங்களும் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக பெரும்பான்மை இல்லாமையினால் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 3 வருடங்கள் 10 மாத காலப்பகுதியில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான அமர்வு இன்றைய தினம் மாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இன்றைய அமர்வில் மதிய போசனத்திற்கு பிறகு சபை கூடிய போது சபையில் 14 உறுப்பினர்கள் கூடியிருந்தனர். இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் உரையாற்றிக் கொண்டிருக்கையில் சபையில் 12 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

இதனை எதிர்கட்சி தலைவர் சபைக்கு சுட்டிக்காட்டிய நிலையில் சபை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டதுடன், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வருத்தம் தெரிவித்தார்.

Related posts

மீண்டும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவி விலகல்! காரணம் வெளியாகவில்லை

wpengine

விகாராதிபதி மர்ம மரம், இன்று காலை சடலம் மீட்பு

wpengine

பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine