பெண்கள் சுயதொழில் செய்வதனால் குடும்பச்சுமையை குறைக்க முடியும்- அமீர் அலி

(அபூ செய்னப்)

பெண்கள் சுயதொழில் செய்வதனால் குடும்பச்சுமையை குறைக்க முடியும். இன்றைய பொருளாதார நிலையில் குடும்பத்தை சிக்கலின்றி நடாத்த பெண்களும் சிறு கைத்தொழில்களில் ஈடுபட வேண்டும், அதற்கான முன்னெடுப்புக்களை நாம் செய்து வருகிறோம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். 

பொலன்னறுவை கட்டுவன்வில அல்-நஜா தஃவா மகளிர் சங்கத்தின் அங்கம் வகிக்கும் தையல் பயிற்சியினை நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழும்,பரிசில்களும்,தையல் இயந்திரமும் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இன்றைய நாட்களில் அதிகமானவர்கள் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்துவதில் பெரும்பாலும் சிரமத்தையே மேற்கொள்கின்றனர், இதனால் தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியாத அவநிலை, அவ்வாறே நல்ல சுகாதாரத்தை கொடுக்க முடியாத நிலை, ஒரு நாளை கழிப்பதில் உள்ள சிரமங்கள் இப்படி ஏழைக்குடும்பங்களை வருமானப் பற்றாக்குறை சுழற்றி அடிக்கிறது.unnamed (1)
வீட்டில் ஆண் மட்டுமே உழைப்பதனால் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு அந்த குடும்பத்தினை கொண்டு நடாத்த பெண்கள் படுகின்ற அவஸ்தைகள் மிக அதிகம், இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.பெண்களும் தன்னம்பிக்கையுடன் சுயதொழில்களை மேற்கொண்டு குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதில் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.
ஒருகுடும்பத்தின் முக்கிய நிர்வாகி பெண்தான். அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த சுமையும் பெண்கள் மீதே விழுகின்றது, குடும்பத்திற்குள் எழுகின்ற எல்லா பிரச்சினைகளையும் சமயோசிதமாக முகம் கொடுத்து சாணக்கியத்துடன் தீர்த்து வைக்கின்ற அந்தப்பக்குவம் பெண்களிடமே உண்டு. எனவே இந்த சுயதொழில் வாய்ப்புக்கள் அவர்களுடைய நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தும் என நம்புகிறேன் எனக்கூறினார்.unnamed (2)
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.தெளபீக், அமைச்சரின் இணைப்பாளர் அக்பர் சேர்,வெலிக்கந்தை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஹைருன் நிசா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares