பெண்கள் கூட்டாக தொழில் முயற்சிகளில் ஆர்வம் காட்டுங்கள் – அமீர் அலி

(அபூ செய்னப்)

பெண்கள் கூட்டாக தொழில் முயற்சிகளில் ஆர்வம் காட்டுங்கள்.அபிவிருத்தியில் பெண்கள் தமது பங்களிப்புகளை செய்யுமுகமாக புதிய தொழில் முயற்சிகளுக்கு முன்வரவேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கூறினார்.
கோரளைப்பற்று மேற்கு,ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் கோரளைப்பற்று மேற்கு,ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.b53f134c-8b39-4aaa-817c-3194fdb71e7e
இந்த பிரதேசத்தில் அதிகபட்ச அபிவிருத்திகளை நான் செய்துள்ளேன் என அவர் அங்கு தெரிவித்ததோடு மக்கள் கருத்துக்களும் பிரதி அமைச்சரினால் உள்வாங்கப்பட்டது.       பிரதேசத்திலுள்ள குறைபாடுகள் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டது,கல்விப்பிரச்சினை,காணிப்பிரச்சினை,குடிநீர் பிரச்சினைகள்                 வெகுவாக பேசப்பட்டது. மஜ்மா நகர் பிரதேசத்தில் கிரவல் அகழ்வானது முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.0e8dafce-b255-4699-b156-7bc5382f9732

சூடுபத்தின சேனை பிரதேசத்தில் சட்டவிரோத காணிகளை பிடித்துள்ளவர்கள் அந்த காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதோடு அந்த பிரதேசத்தில் தொழிலாளர் வீட்டுத்திட்டம் அமைய இருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.102bdd25-f064-421b-b7c7-780b3e22e7d3
இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதேச செயலாளர் ஜனாப் நெளபல்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் ருவைத், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் அஸ்மி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares