பெண்கள் ஒரு நிலைக்கு வர வேண்டும் என்றால், ஆண்களின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் -சந்திரிகா

ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்க வேண்டுமானால், தமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தான் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் தாரை வார்க்க முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையை, முன்னாள் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தரப்பினர் கட்சியை தாரை வார்க்க முயற்சித்த வேளையில் தான் கட்சியை பாதுகாத்து இந்த நிலைக்கு கொண்டு வந்ததாக
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறுவதற்கு தன்னுடைய செயற்பாடே காரணம் எனவும் அவர் இதன்போது நினைவூட்டினார்.

அத்துடன், தனது அமைச்சரவையில் புத்தகங்களை படிக்கும் இரு ஆண்கள் மாத்திரமே இருந்ததாகவும், அதில் ஒருவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பெண்கள் ஒரு நிலைக்கு வர வேண்டும் என்றால், ஆண்களின் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares