பிரதான செய்திகள்

புலி குடும்பங்களுக்கு வடமாகண சபையின் பணம் – திவயின செய்தி

வட மாகாண சபையின் பணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் குடும்பங்களை பராமரிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வட மாகாணசபையின் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 25 மில்லியன் ரூபா இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளது குடும்பங்களை பராமரிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபையில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு அரசாங்க கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

வட மாகாணசபையின் கிராமிய அபிவிருத்தி விவகார அமைச்சர் டெனீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய 25 மில்லியன் ரூபா பணம் வழங்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிதிக் கொடுப்பனவு வழங்குவது குறித்து அமைச்சரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்ட போதிலும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கடும் எதிர்ப்பினால் தீர்மானத்திற்கு அனுமதியளிக்கப்படவில்லை என திவயின பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்

wpengine

புதிய காத்தான்குடி தார்வீதி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்த ஹிஸ்புல்லா

wpengine

யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விடுமுறை-ஆளுநர்

wpengine