பிரதான செய்திகள்

புலிகளினால் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பா.உ சாள்ஸ் எதிர்ப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் காடழித்து புதிய முஸ்லிம் குடியேற்றங்களை நிறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். 

 

இக் குடியேற்றங்களுக்கு அரசியல் அதிகாரம் கொண்டவர்களுடன் இணைந்து மாவட்ட அரச அதிபர் உட்பட்ட அனைத்து அரச உத்தியோகஸ்தர்களும் துணைபோகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களுடைய குடியேற்றம் தொடர்பில் குழப்பகரமான பதற்றநிலை காணப்படுகின்றது. யுத்தத்திற்கு முன்னர் முல்லைத்தீவில் இருந்தவர்கள் மீண்டும் இங்கு வரும் போது வீட்டிற்கு உரிய காணி இல்லை என்ற ரீதியில் அவர்களுக்கான காணி வழங்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால் ஒரு சில அரசியல் வாதிகள், தங்களுடைய அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக குளாமுறிப்பில் காடழிப்பு செய்து வருகின்றார்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நான் பேசியுள்ளேன். அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கிருந்திருந்தார். அரசியல் ரீதியாக அதிகாரம் உள்ளவர்கள் சிலர் கடந்த ஆட்சிக் காலத்தில் இழைத்த தவறினை இப்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இழைக்கின்றார்கள். இவர்களுடைய தவறான செயற்பாடுகளும் அந்த மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களமும் உடந்தையாக இருக்கின்றது.

வேறு பிரதேசத்தில் சொந்தமாக காணி, வீடு உள்ளவர்களுக்கு, அரசாங்கத்தினால் காணி வழங்க முடியுமா? இந்த கேள்வியை அரச அதிபரிடமும் கேட்டுள்ளேன். அரச அதிபர் எந்த பதிலினையும் எனக்கு வழங்கவில்லை. தற்போது முல்லைத்தீவில் குடியேற்றப்படவுள்ள முஸ்லிம் மக்களுக்கு ஏற்கனவே அரசாங்கத்தினால் காணிகளும், வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால்தான் நாங்கள் எதிர்க்கின்றோம் பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பின் போது ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இங்கு அரசியல் ரீதியாக ஒரு பகுதி மக்களுக்கு ஒரு விதமாகவும், இன்னுமொரு பகுதி மக்களுக்கு வேறோர் விதமாகவும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனால்தான் குழப்பங்களும் உருவாகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்- மீள்பார்வைக்கு இது சமர்ப்பணம்

wpengine

2022ஆம் ஆண்டுக்கான தனது பணிகளை ஆரம்பித்தது மன்னார் மாவட்ட செயலகம்

wpengine

ராஜபக்ஷவுக்கு இடையில் பனிப் போர்! நாமலின் மாமாவுக்கு பணிப்பாளர் பதவி

wpengine