புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த காஞ்சா”வை ஏற்றுமதி செய்ய வேண்டும்.

புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்து தயாரிப்பு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ள“மருந்துக்கான காஞ்சா”வை ஏற்றுமதி செய்ய தயாராகி வருவதாக தெரியவருகிறது.

தேசிய மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய, ஆயுர்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி, சமூக சுகாதார ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி (Sisira jeyakody) இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனை கூறியுள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு இதற்கான அனுமதியை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உலகில் பல நாடுகளில் மருந்து உட்பட பல தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் கஞ்சாவை பணப் பயிராக பயிரிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.  

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares