பிரதான செய்திகள்

புத்தளம் பள்ளிவாசலுக்கு அருகாமையில் 15 வயது சிறுவன் கொலை

புத்தளம் சமீரகம  பகுதியிலுள்ள மைய்யித்துபிட்டி பள்ளிவாசல் அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சுமார் 15 வயதுடைய  சிறுவனின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கொலையாளி நாகவில்லை சேர்ந்த  நபர் எனவும், குறித்த நபர் பொதுமக்களால் அடித்து பிடிக்கப்பட்டு முந்தல் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட பின் வைத்தியாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உயிரிழந்த சிறுவன் சமீரகமயை சேர்ந்த நஸார் என்பவரின் மகன் என தெரியவருகிறது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இப்படுகொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை, பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கைத்தொழில்அமைச்சின் வழிகாட்டலில் 25லச்சம் தென்னை நடும் வேலைத்திட்டம்

wpengine

கோத்தபாய ராஜபக்ச, கருணா தரப்பினருக்கு 5 கோடி

wpengine

மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

wpengine