Breaking
Sat. Dec 21st, 2024

தற்போது சாலிஹீன் பள்ளி மஹல்லாவில் வசிக்கும், இல 42, கடுமையான் குளம் வீதி, புத்தளம் எனும் முகவரியைச் சேர்ந்த முகம்மது ஹனிபா முகம்மது ஹலீல் சிறுநீரக நோயால் பாதிப்புற்று தமது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் தொடராக சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

அல்லாஹ்வின் அருளால் இவரது உயிரைப் பாதுகாக்க மிக அவசரமாக சிறுநீரக மாற்ற சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படல் வேண்டும் என வைத்திய ஆலோசனை நல்கப்பட்டுள்ளது.

IMG-20151229-WA0004

இவர் ஒரு சாதாரண சாரதி என்பதனால் வருமான மூலங்கள் இன்றி சத்திர சிகிச்சைக்கு முன்னுள்ள வைத்திய பராமரிப்பை மேற்கொள்வதற்கு கூட சிரமப்படுகின்றார். இவரது உறவினர்களினது தயவிலும், பராமரிப்பிலும் தான் சிரமங்களுக்கு மத்தியில் இவரது ஆரம்ப சிகிச்சையினை பெற்று வருகின்றார்.

இவரது சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு பெருமளவு பணம் தேவைப்படுகின்றது. பணத்தினை ஏற்பாடு செய்து கொள்வதில் இவரது உறவினர்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே இரக்கச் சிந்தையுள்ள தாராள மனம் கொண்ட நீங்கள் இவரது சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிகழ்வதற்கும் இவர் பூரண சுகம் பெறுவதற்கும் முதலில் அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறும் தங்களால் முடியுமான நிதிப் பங்களிப்பினை வழங்குமாறும் விநயமாய் வேண்டுகின்றோம்.

வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் நல்லருள்பாலிப்பானாக!

நிதிப் பங்களிப்புக்கான விபரம் :

M.H.M. KALEEL

ACCOUNT NO  : 0110249798001

AMANA  BANK – PUTTALAM BRANCH, SRI LANKA.

மேலதிக விபரங்களுக்கு :

T.M.Naseer – பள்ளி நிர்வாகம் சார்பில் – 0775250177

A.H.M.Hafileen – பள்ளி நிர்வாகம் சார்பில் – 0778866655

M.H.M.Nadeer – உறவினர் சார்பில் – 0714866689

http://puttalamonline.com/2016-02-26/puttalam-regional-news/100886/

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *