பிரதான செய்திகள்

புதிய விமானப்படைத் தளபதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு!

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

 
இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அண்மையில் நியமிக்கப்பட்டார்.

 
பதவியேற்ற பின்னர், புதிய விமானப்படைத் தளபதி சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்ததுடன் நினைவுப் பரிசையும் கையளித்தார்.

 
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Related posts

கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டிய தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை – ஹாரிஸ்

wpengine

பலி வாங்காமால் பலனடையுங்கள் முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான்

wpengine

பாடசாலை நிர்வாகத்தில் தலையீடும் மன்னார் ஆயர் இல்லம்! முருங்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine