புதிய மகாநாயக்கர் தெரிவு எதிர் வரும் 7ஆம் திகதி

கண்டி அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கரை தெரிவு செய்யும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 7ம் திகதியன்று இடம்பெறவுள்ளது.

இதற்கான தேர்தல் 7ம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறும் அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கராக இருந்த வணக்கத்துக்குரிய கலகம தம்மசிடி ஸ்ரீ தம்மானந்த அத்தாஸ்ஸி தேரர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலமானதை அடுத்து இந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

இலங்கையின் பௌத்த மதத்துக்கு முதன்மையான குருவாக விளங்கும் அஸ்கிரிய மகாநாயக்கர், அரசியலுக்கும் முக்கிய ஆலோசகராக சில வேளையில் முடிவுகளை மாற்றுபவராக செயற்பட்டு வருகிறார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares