பிரதான செய்திகள்

புதிய உள்ளுராட்சி தேர்தல் முறை ஒரு பார்வை

(சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்)

தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்
தேசிய காங்கிரஸ்
2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல்
முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் எண்ணிக்கை
உள்ளுராட்சி சபைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவில் 60 சதவி தமான அங்கத்தவர்கள் வட்டார
அடிப்படையிலும ; 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு
செய்யப்படவுள்ளனர். மொத்தம் உறுப்பினர்களுள் 25 சதவீதம் பெண கள் உறுப்பினர்களாக
இருப்பர்.

ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கையினை
அடிப்படையாக வைத்தே சபையொன்றின் மொத்த அங்கத்தவர் தொகை திர்மானிக்கப்படும்.

அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் தொகையினை 60 சதவீதமாகக ;
கொண்டு அத்துடன் மேலதிகமாக 40 சதவீத்தினை சேர்த்து அங்கத்தவர் தொகை
திர்மானிக்கப்படும்.

உதாரணமாக சபையொன்றின் வட்டாரங்களின் எண்ணிக்கை 12 என்றால் அது 60 சதவீதமாக
கொள்ளப்பட்டு மிகுதி 40 சதவீத்திற்கு  இன்னும் 08 அங்கத்தவர்கள் சேர்க்கப்பட்டு மொத்த
அங்கத்தவர்கள் தொகை 20 ஆக அமையும்.

வேட்பு மனு
கட்சிகள் அல்லது குழுக்கள் இரண்டு வேட்புமனுப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும ;.
முதலாவது வேட்பு மனு
முதலாவது வேட்புமனுப்பத்திரம் வட்டாரங்களுக்கு பெயர் குறிப்பிட்டு வேட்பாளர்களை நியமிக்கும ;
வேட்பு மனுவாகும்.
இந்த வேட்புமனுவில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்க
வேண்டும ;. இவர்களுள் 10 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் ; வேண்டும் ;.
இரண்டாவது வேட்பு மனு
இரண்டாவது வேட்பு மனுப்பத்திரத்தில் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய 40
சதசவீதமான உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சமனான எண்ணிக்கையுடைய நபர்களும்
மேலதிகமா 03 நபர்களும் சேர்க்கப்பட்டு பெயர்கள் வழங்கப்பட வேண்டும்.

இவர்களுள் 50 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.
இளைஞர் பிரதிநிதித்துவம்
மொத்த வேட்பாளர்களின் தொகையில் 30 சதவீதமானவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும்.

Related posts

மஹிந்த அணியுடன் ஆட்சி அமைக்க தயார் மைத்திரி

wpengine

IMF தீர்மானத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களிக்கும்!-ஜீவன் தொண்டமான்-

Editor

இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் மின் வழங்கள் வழமைக்கு திரும்பும் -மின்சார சபை

wpengine