அரசியல்பிரதான செய்திகள்

புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டு வர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை நேற்று (5.2.2025) அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரத்துக்கு இணங்க பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே பிரதான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பில் மாற்றமொன்று எமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு இணங்க நிச்சயமாக இடம்பெறும்.

ஆனால் அவசர அவசரமாக அரசமைப்பொன்றை உருவாக்க நாம் தற்போது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்கள் தான் ஆகின்றன. எமக்கு பொருளாதார சவாலை நிவர்த்தி செய்ய வேண்டிய பிரதான தேவை உள்ளது.

முதலில் நாட்டின் பொருளாதாரத்தை சீரான நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்.

இதற்கு இன்னும் சில காலங்கள் எடுக்கும் சர்வதேச ரீதியாகவும் சில சவால்கள் காணப்படுகின்றன.

எனினும் நேரத்தை இழுத்தடிக்காமல் உரிய காலத்தில் புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்போம். இப்போதே அனைத்தையும் செய்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

Related posts

பண்டாரவெளி காணி விடயத்தில் வெள்ளிமலை மக்களை மாவட்ட செயலகத்தில் கேவலமாக பேசிய கேதீஸ்வரன்! கிராம மக்கள் விசனம்

wpengine

அமைச்சர் ஜோன் அமரதுங்க கைது செய்யப்பட வேண்டும்: சிங்ஹல ராவய

wpengine

சலுகை அடிப்படையில் வாகன இறக்குமதி: சுற்றுநிருபத்தில் திருத்தம்

wpengine