கிளிநொச்சிபிராந்திய செய்தி

புணர்வாழ்வு வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு பிள்ளையின் தந்தை .

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புணர்வாழ்வு வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக நேற்று சனிக்கிழமை தர்மபுரம் புணர்வாழ்வு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த எஸ். லக்சன் (வயது – 26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழர் மரபுரிமை நிகழ்வில் பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் குழப்பம்

wpengine

வவுனியாவில் 1,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெராேயினுடன் 27 வயதுடைய இளைஞர் கைது..!

Maash

வட மாகாண பாடசாலைகளுக்கு 27ம் திகதி விடுமுறை..!

Maash