செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

புகையிலைக் கன்றுகளுக்கு இடையே கஞ்சா செடி – ஒருவர் கைது .

யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு  கிடைத்த தகவலின் பேரில், புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

இவர் தனது புகையிலைத் தோட்டத்தில், புகையிலைக் கன்றுகளுக்கு இடையே கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கஞ்சா செடியை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடியின் உயரம் சுமார் 4 அடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது சுன்னாகம் பொலிஸார் அவரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அப்துல் ராசிக்கு எதிராக பொதுபல சேனாவின் வழக்கு! ஒத்திவைக்கப்பட்டுள்ளது

wpengine

பஷில் ராஜபக்ஷ மீண்டும் விடுதலை

wpengine

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவு

wpengine