செய்திகள்பிரதான செய்திகள்

புகையிரத கடவையில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞர் புகையிரதத்தில் மோதி பலி..!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணியில் இன்று அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கருவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ்.நிசாந்தன் என்னும் 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.


புகையிரத கடவையிலிருந்து தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சடலத்தினை மோதிய புகையிரதத்தில் எடுத்துச் சென்று ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

உறவை புதுபிக்க ரஷ்யாவிடம் மன்னிப்பு கோர உள்ள தையிப் அர்துகான்

wpengine

பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற இன்டர்போல் இலங்கைக்கு

wpengine

80 வயது மூதாட்டிக்கு மரண தண்டனை! காலம் கடந்து தள்ளுபடி செய்யப்பட்டது.

Maash