பிரேமதாசவின் கனவை நிறைவேற்ற மீண்டும் கம்உதாவ வேலைத் திட்டம்

கம்உதாவ வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அது தொடர்பில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

கம்உதாவ வேலைத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 5 ஆண்டுகளில் 25 மாவட்டங்களிலும் வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.

அதன்படி இந்த ஆண்டு புதிய கம்உதாவ வேலைத்திட்டம் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் யோசனையில் கம்உதாவ திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் அது தேசத்திற்கு மகுடம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டது.

அனைத்து கம்உதாவ திட்டங்களின் போது இதற்கு முன்னர் போன்று கலாச்சார ரீதியான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.

அதற்கான நிதியை தனியார் நிறுவனங்களினுடாக பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் செலவிடப்படும் நிதி, வீடுகளை நிர்மாணிப்பதற்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மாத்திரம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares