உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரான்ஸில் வெடி சம்பவம் – 37 பேர் காயம்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் நகரில் இடம்பெற்ற வெடி விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெடிவிபத்து காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் நபர்கள் சிங்கு இருக்கிறார்களா என்று பாதுபாப்பு படையினர் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

wpengine

வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர்;காய் நகர்த்தல்கள் யாருக்கு கை கொடுக்கும்?

Editor

வவுனியாவில் விக்னேஸ்வரன்,சத்தியலிங்கம் மோதல்

wpengine