தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பிரதேச மட்ட இலவச WiFi வலையம் விரைவில்

இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அதிகமான பிரதேசங்களுக்கு Wi-Fi இணைப்பை வழங்கிய ஒரே ஒரு மற்றும் முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையை இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த இலவச Wi-Fi திட்டத்தினால் ஒரு நபருக்கு 100 மெகாபைட் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

மு.கா தலைவரின் சுய நல அரசியலின் வெளிப்பாடு – மீரா.எஸ். இஸ்ஸடீன்

wpengine

சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் கையெழுத்து! அஹ்னாப் ஜஸீமும் கையெழுத்து

wpengine

சதொச மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Editor