பிரதான செய்திகள்

பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நபர் ஒருவர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டத்தை சேர்ந்த கி.தரணிதரன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், உயிலங்குளம் 50 வீட்டுத்திட்டத்தில் வாழும் 31 குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் அத்தியவசிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இதேவேளை காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும், வீதிகள் புனரமைத்துத்தர வேண்டும், யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் மற்றும் அனர்த்தங்களினால் சேதமடைந்த வீடுகள் சில புனரமைப்பு செய்துதரவேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் குறித்த நபர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு !ரிஷாட் ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை.

wpengine

மே18 அன்று முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது..? ஒரு சூடான சிறப்பு பார்வை!

wpengine

ரோஸி சேனாநாயக்கவின் கொழும்பு குழு யாழ் விஜயம்

wpengine