பிரதான செய்திகள்

பிரதி அமைச்சர் ஹரிஸ் தனிப்பட்ட அரசியலுக்கு பிரச்சினைகளை உருவாக்குகின்றார்.

தனிப்பட்ட அரசியல் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு பிரச்சினையை உருவாக்குவதானது தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் சூழலை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இவ்விவாதத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மற்றும் பிரதி அமைச்சர் ஹரிஸ்ஸுக்கும் இடையில் வாக்குவாதம் நிலவியது.

இதன்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அனைவரும் இணக்கம் தெரிவித்த ஒரு விடயத்தில் பிரதி அமைச்சர் ஹரிஸ்ஸின் தனிப்பட்ட அரசியல் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு பிரச்சினையை உருவாக்குகின்றார்.

எல்லை நிர்ணய பிரச்சினை என ஒன்றும் இல்லை.
இச்செயற்பாடு எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றில் வந்தே முடியும் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கின்றேன். மனதில் வைத்துகொள்ள வேண்டும் என்றார்.

Related posts

ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு, வியர்வை சிந்த உழைக்க வேண்டும் – அதிபரின் கட்டளை

wpengine

நிதியமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை – அமைச்சர் றிசாட்

wpengine

தகவல் தெரிந்தால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும்

wpengine