உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரதமர் மோடியின் கல்வி தகுதி என்ன? கெஜ்ரிவால் அதிரடி கேள்வி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய தகவல் ஆணையத்திடம் (சி.ஐ.சி) பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய தகவல் ஆணயம் மோடியின் டிகிரீ படித்த விவரங்களை வெளியிடுமாறு டெல்லி, குஜராத் பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று நாட்டின் பிரதமரின் கல்வி தகுதி குறித்த தகவல்களை மறைபதற்கான அவசியம் என்ன? என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி தகவல் ஆணையர் எம் ஸ்ரீதர் ஆச்சரியலூக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதினார்.

நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்த தகவல்களை நாட்டு மக்கள் தெரிந்துக்கொள்ள உரிமை உள்ளது. எனவே இந்த தகவலை வெளியிட வேண்டும் எனவும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மோடி டிகிரி படித்த விவரங்களை கெஜ்ரிவாலிடம் தருமாறு டெல்லி, குஜராத் பல்கலைக் கழகங்களுக்கு மத்திய தகவல் ஆணயம் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, மோடி படித்த டிகிரியின் குறியீட்டு எண்கள் மற்றும் வருடம் ஆகியவற்றையும் அவருக்கு அளிக்குமாறு பிரதமர் அலுவலகத்தை தகவல் ஆணையத்தின் ஆணையர் ஸ்ரீதார் ஆச்சரியலூ அறிவுறுத்தியுள்ளார்.

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக இத்தகைய விவரங்களை அவசியம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை ரோல் நம்பர் இல்லாமல் ஒரு மாணவரின் தகவலை தேடி எடுப்பது மிகவும் சிரமமான விடயம் என்று டெல்லி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

Related posts

முசலி பிரதேச செயலாளர் விபத்து! மன்னார் வைத்தியசாலையில் அனுமதி

wpengine

வட மாகாணத்தில் தமிழ் ஆளுநர்

wpengine

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி! 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு

wpengine